இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மீது கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் கத்ரின் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

அதன்படி
வெளிவிவகார செனட் குழு உறுப்பினர்கள் எலிசபெத் கத்ரின் ஹோஸ்டுக்கு வழங்கிய பதில்கள் நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

செனட் குழு உறுப்பினர்களின் விசாரணைகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துதல், தூதரக உறவுகளை பேணுதல், அரசுடன் புதிய கொள்கைகளை அமுல்படுத்துதல் என பல யோசனைகளை செனட் குழு முன் எலிசபெத் ஹோஸ்ட் முன்வைத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வலயத்தில் இருந்து சீன ஆராய்ச்சிக் கப்பல்களை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் திருமதி எலிசபெத் கத்ரின் ஹோர்ஸ்ட் செனட் சபையில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க