உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ், அமரிக்காவின் உருவாக்கம் அல்ல- அமரிக்க அதிகாரி.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அமரிக்கா உருவாக்கவில்லை.

எனினும் அமரிக்காவின் சில வெளிநாட்டுக்கொள்கைகள் இதற்கு காரணமாக இருந்துள்ளன.

இந்த கருத்துக்களை அமரிக்காவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி, லோரன்ஸ் செலின் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் 250பேரை பலிகொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிந்தாந்த கருத்தியல் சம்பவம். போதைவஸ்துவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான தாக்குதல் என்று இதனைக்கூறமுடியாது.

இஸ்லாமிய தீவிரவாதம் நிதிசேகரிப்பு, போதைவஸ்துக் கடத்தல் உட்பட்ட பல்வேறு முறையற்ற நடவடிக்களின் மூலம் வளர்ந்து வருகிறது.

இதனை சர்வதேச ரீதியில் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, அமரிக்காவின் புலனாய்வுத்துறை சவூதி அரோபியாவுடன்; இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையே உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமையை அமரிக்க இராணுவ அதிகாரி மறுத்துள்ளார்.

எனினும் இலங்கையை சீனா கடன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் அமரிக்காவின் உருவாக்கம் அல்ல. எனினும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரேபிய வசந்தம் என்ற நடவடிக்கையின் மூலம், ஈராக் முற்றுகையிடப்பட்டது.

எனினும் இதன்காரணமாக ஈரான் என்ற நாட்டுக்கு அதிக சக்தியை அளித்த தவறு இடம்பெற்றுவிட்டது.

அதேபோன்று சிரியாவுக்கு எதிரான போரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை உருவாக்கிவிட்டது.

எனவே அமரிக்காவின் சில வெளிநாட்டுக்கொள்கைகள் வெற்றியளித்துள்ளன.

சில வெற்றியளிக்கவில்லை என்றும் அமரிக்காவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி, லோரன்ஸ் செலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க