இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்றுமுதல் முதலாக அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் கலந்துக்கொண்;ட பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநிலத்துக்கான ரூ.42,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல்லும் நாட்டியுள்ளார்.
மேலும், 9,800 கோடி ரூபாவில் அமைக்கப்படவுள்ள 15 விமான நிலைய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டியுள்ளதுடன், 12 புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 70 இலட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க