இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இரண்டாவது இளநீர் செய்கைகிராமம் ரலுவ கிராமம் நிறுவப்பட்டதுடன் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமான ரலுவ கிராம விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று (25.02) விவசாய அமைச்சர் வழங்கி வைத்தார்.
கருத்து தெரிவிக்க