இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து கோவில்களுக்கு மக்கள் செல்ல இராணுவம் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

அதாவது,கடுவன் முத்துமாரி அம்மன் கோவில், வசாவிளான் மணம்பிறை கோவில், விசாவிளான் சிவன் கோவில், வசாவிளான் நாக கோவில், பலாலி ராஜ ராஜேஸ்வரி கோவில், பலாலி நாக தம்பிலான் கோவில் மற்றும் பலாலி சக்திவேலி முருகன் கோவில் ஆகியவற்றில் முன்பு மாதந்த மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு மாட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,வாராந்திர பூஜை மற்றும் பிற சடங்குகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனகோவில் அறங்காவலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பல கோரிக்கைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க