தென் அமெரிக்க நாடான சிலியில் வல்பரைசோ எனும் வன பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
சிலியில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காட்டுத்தீயானது லத்தின் அமெரிக்க நாடுகளையும் பாதித்துள்ளது.
வினாடெல் மார் நகரை சுற்றியுள்ள பகுதியில் 200 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் தீ பரவிய பகுதியை அணைக்கும் பணியை மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினால், 1931 இல் நிறுவப்பட்ட பிரபல தாவரவியல் பூங்கா ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க