தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு, மதம் என்ற அடிப்படையில் சமூக ரீதியில் ஆழமான தொடர்புகளை பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே பல வர்த்தகர்கள், அந்த அமைப்புக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் இருந்து இது தெரியவந்துள்ளது.
இதன்படி அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதன் ஒருக்கட்டமாக குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியின் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகர்களும் தௌஹீத் அமைப்புக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை நுவரெலிய பிளக்பூல் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வீட்டில் இருந்த கணணியின் மூலம் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க