நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு ஆயுட்கைதிகள் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில், தமிழக ஆளுநரே முடிவெடுக்கமுடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று தள்ளுபடி செய்தபோதே இந்த தீர்மானத்தை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
ஏற்கனவே இந்த விடுதலை விடயம் ஆளுநரின் கைகளில் இருப்பதாக தமிழக அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக அமைச்சரவையின் ஒப்புதலும் இதற்கு இருப்பதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையிலேயே உச்சநீதிமன்றம் மீண்டும் 7பேரின் விடுதலை விடயத்தை ஆளுநருக்கு பொறுப்பளித்துள்ளது.
கருத்து தெரிவிக்க