பாகற்காய் கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அது நம் உடலுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் அதில் உள்ள சிறப்புகள் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது. பாகற்காயிலுள்ள சரோகின், உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கியமானது. எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் பாகற்காய் நல்லது, ஏனெனில் இதில் கலோரிகள் அதிகம் இல்லை.
அத்துடன் பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நமது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றது. மேலும், நமது சருமத்தை அழகாகவும், விரைவில் வயதாகாமல், சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் பாகற்காய் சாப்பிடுவது நல்லது. சில ஆய்வுகள் பாகற்காய் சாப்பிடுவது புற்றுநோய் வளராமல் தடுக்க உதவும் என்றும் கூறுகின்றன. மேலும், பாகற்காய் நம் கண்கள், முடி மற்றும் கல்லீரலுக்கும் நல்லது.
Also Read: பிரண்டையின் பயன்கள்
கருத்து தெரிவிக்க