அழகு / ஆரோக்கியம்இதழ்கள்

பிரண்டையின் பயன்கள்

பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம்.

கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் இதய வால்வுகளும் பாதிப்படைகின்றன. ஆனால் பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம்  சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும். பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

பிரண்டையில்  அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி  ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது இந்த பிரண்டை.  இதன் வேர் கூட  எலும்பு முறிவில் கட்டுப்போட உதவும்.

கருத்து தெரிவிக்க