அழகு / ஆரோக்கியம்

டார்க் சொக்லேட் இதய நோநோயினை தடுக்குமாம்!

டார்க் சொக்லேட் இதய நோநோயினை தடுக்க உதவும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொக்கோவினை வழக்கமாக உட்கொண்டால் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.கொக்கோவினை தினசரி வெவ்வேறு அளவுகளில் உட்கொள்ளும் போது உண்மையில் இதய நோய்கள்  வரமால் தடுக்கிறது.

சொக்லேட்டின் அற்புதமான மருத்துவ நன்மை என்னவென்றால், இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் சொக்லேட் உட்கொள்வதால்  மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் என்பன  அதிகரிக்கறது. அதில், டார்க் சொக்லெட் சாப்பிடுவதால் இதயம்  ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரியவந்தது.

டார்க் சொக்லெட்டுகளைச் சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.

டார்க் சாக்லெட்டில் ஆன்டி-ஒக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

Also Read: டிராகன் பழம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்குமாம்

Also Read: பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லதா?

கருத்து தெரிவிக்க