18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளதுடன்,
இதன் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க