அழகு / ஆரோக்கியம்

அப்பிள் பழம் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம்!

அப்பிள் பழம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய விட்டமின்களை  உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. அப்பிள் பழத்தில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

அப்பிள் பழத்திலுள்ள க்யூயர்சிடின் என்னும் antioxidants மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. அப்பிள் பழ சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் அப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும்  பொருள்களில் ஒன்று.

அப்பிள் பழம் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள antioxidants ஆல், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். அப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி  அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Also Read: ப்ரக்கோலியில் உள்ள நன்மைகள்

Also Read: அகத்தி கீரையின் மருத்துவ குணங்கள்

 

 

கருத்து தெரிவிக்க