அழகு / ஆரோக்கியம்

ஆரோக்கியமான உடலுக்கு முட்டை அவசியம்

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
விட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
Antioxidants: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

முட்டையுடன் கோதுமை பாண் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பாண்  ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.

Also Read:ஏழைகளின் அப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனியின் நன்மைகள்

Also Read: அருகம்புல் ஜூஸின் நன்மைகள்

கருத்து தெரிவிக்க