வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவிற்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை கோரி, பல சுகாதார நிபுணர்கள் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களாக பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான தீர்வு வழங்கப்படவில்லை என தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்
Also Read: வருட இறுத்திக்குள் இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்
Also Read: ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சியில் அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
கருத்து தெரிவிக்க