ஏழைகளின் அப்பிள் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சிறப்புகள் உள்ளன. இது விட்டமின் சி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகள் நிறைந்த ஒரு அற்புதமான சிறிய கனியாகும்.
நெல்லிக்காயில் விட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் antioxidant நிறைந்துள்ளதால் சேதமடைந்த செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.
நெல்லிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கருத்து தெரிவிக்க