அழகு / ஆரோக்கியம்

அருகம்புல் ஜூஸின் நன்மைகள்

சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை  கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் ஜூஸ் எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளிலிருந்து தப்பிக்கலாம்.

Also Read: கரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக்  கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அருகம்புல் ஜூஸினை  காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது உடல் வெப்பத்தை குறைத்து சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தத்தை தூய்மையாக்கும். உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவு பெறும். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டு. ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். காலையில் அருகம்புல் ஜூஸ் குடித்து வர அன்றாட வாழ்விலுள்ள மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.

Also Read: டிராகன் பழம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்குமாம்

 

கருத்து தெரிவிக்க