பொதுவாக நவம்பர் முதல் பெப்ரவரி வரையிலும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும் இன்ஃப்ளூயன்ஸாவின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் தற்போது இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் போன்ற நோய்கள் அசாதாரண விகிதத்தில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. எனவே காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக இன்ஃப்ளூன்ஸா காய்ச்சல் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவதால் மேற் குறிப்பட்ட தொகுதியினர் மிக எச்சரிக்கையாக இருக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க