சினிமாசினிமா

அன்னபூரணி” திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவின் நடிப்பில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம்1ம்  திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது எக்ஸ் வலைதளத்தில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அன்னபூரணியின் பின்னால் உள்ள நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் ஆகும், துன்பத்தை ஏற்படுத்துவது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க