அழகு / ஆரோக்கியம்

பப்பாளிப் பழத்தைக் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளிப் பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது பப்பாளி பழத்தில் உள்ள முழு சக்தியும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகின்றார்கள்.

பப்பாளிப் பழத்தில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இது உடல் எடையைக் குறைக்கவும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

மேலும் பப்பாளிப் பழத்தில் உள்ள ஒரு காரணியானது நமது ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் செரிமானமாகாமல் இருத்தல் ஏப்பம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுதலை தருகிறது.

சிலசமயம் வயிற்று வலியைப் போக்குவதற்கு உதவுகிறது. மேலும் பப்பாளிப் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி நமது எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. பப்பாளிப் பழம் உடலில் உள்ள அசுத்தங்களைச் சுத்தம் செய்கிறது. ஒரு சிலர் பப்பாளிப்பழம், இதய சம்பந்தப்பட்ட வியாதிகளிலிருந்து விடுதலை தருகிறது என்று கூறுகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க