சினிமாசினிமா

“கேப்டன் மில்லர்” படத்தின் வெறித்தனமான டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது

இந்த வருட பொங்கல் தனுஷுக்கானதாக மாறியுள்ளது. கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள அவரின் ‘கேப்டன் மில்லர்’ படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தில் தனுஷின் அசுரத்தனமான நடிப்பினை காண ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் வெறித்தனமான டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை சென்று தடம் பதித்துள்ளார் தனுஷ். கடைசியாக இவரது நடிப்பில் ‘வாத்தி’ படம் வெளியான நிலையில் தற்போது  ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தினை பெரும் பொருட் செலவில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் வெளியீடாக ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலில் ஆதிக்கத்துக்கு எதிரான படைப்பாக ‘கேப்டன் மில்லர்’ உருவாகியுள்ளது படத்தின் டிரெய்லரிலே உறுதியாகியுள்ளது.

 

கருத்து தெரிவிக்க