இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

2023 ஆம் ஆண்டு முடிவில் இலங்கை சுற்றுலா பயணிகளின் வருகை 1.5 மில்லியன்

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, 2023 ஆம் ஆண்டு முடிவில் இலங்கை சுற்றுலா பயணிகளின் வருகை 1.5 மில்லியன் இலக்கை எட்டியுள்ளது.

இது 2023ஆம் ஆண்டிற்கான இலக்கு என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வருகையாளர்களை கப்பல் சுற்றுலாப் பிரிவினர் ஈர்த்துள்ளது. 2023 டிசம்பர் நடுப்பகுதி வரை சுற்றுலா துறை உள்ளூர் பொருளாதாரத்திற்கு USD 2 பில்லியனுக்கு மேல் பங்களித்தன.

இதற்கு காரணம்  ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச visa-on-arrival செயற்றிட்டம்  என்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு கூறினார்.  மேலும் கொழும்பு நகர ஹோட்டல்கள் 70% க்கும் அதிகமான தங்குமிடங்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ள  அதே வேளையில், வெளிமாவட்ட ஹோட்டல்களிலும் முற்பதிவு எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்குமிட அளவுகள் கிட்டத்தட்ட 80% வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க