சினிமாசினிமா

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான சபா நாயகன் திரைப்படம்; 11.78 கோடி வசூல்

வித்தியாசமான, எதார்த்தமான கதைகளத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் அசோக் செல்வன்.

இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான சபா நாயகன் திரைப்படம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி என மூன்று ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். மேலும் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான சபா நாயகன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.11.78 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க