சினிமாசினிமா

பிக்பாஸ் 7- இந்த வாரம் டபிள் எவிக்ஷன்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 படு பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. எந்த சீசனிலும் இல்லாத விறுவிறுப்பின் உச்சமாக இந்த பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டு வீடு, டபுள் டபுள் எவிக்ஷன் என ஏகப்பட்ட புது விஷயங்கள் நடந்தன.

நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, ஆனால் இந்த 7வது சீசனின் வெற்றியாளராக யார் வருவார் என்பது ரசிகர்களால் இன்னும் கணிக்கவே முடியவில்லை.

இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ரவீனா வெளியேறியுள்ளார் என ஏற்கெனவே தகவல் வர இப்போது இன்னொரு எவிக்ஷன் நடந்ததாக கூறப்படுகிறது.

ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக குணச்சித்திர நடிகை வினோதினி வைத்தியநாதன் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க