இலங்கை

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இந்தியாவில் தங்கத்தின் விலை தற்போது கொஞ்சம் குறையத் தங்கியுள்ளது. எனினும் சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 டொலரைத்  தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  அதனடிப்படையில் கடந்த வாரத்தில் 1,798 டொலரில் நிறைவடைந்த தங்கம் இந்த வாரத்தில் 1,810 டொலராக காணப்பட்டது.

24 கெரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,140 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஒரு பவுன் தங்கம் விலை 40,912 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்

அதே போல, சென்னையில் 22 கெரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 46,850 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஒரு பவுன் தங்கம் விலை 37,480 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

இந்த விலை இறக்கம் மிகப் பெரியது இல்லை என்றாலும், இந்த நேரத்தில் விலை இறக்கம் கண்டு இருக்கிறதே என்று மக்கள் மகிழ்கின்றனர்.

கருத்து தெரிவிக்க