கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 233 ஆகும்.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த செவ்வியில், “கடந்த சில கிழமைகளாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர் கொள்வதற்காக தேசிய சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்சுகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இதனால் தளர்வுகளை விரிவுபடுத்துகிறோம்.
நத்தார் காலத்தில் இங்கிலாந்தில் இயல்பு நிலை திரும்பும் என்பது எனது வலுவான நம்பிக்கையாகும். அடுத்து வரும் மாதங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது . என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க