இந்தியா

குறி வைத்தது.. அந்தமான் தீவிற்கு போர் கப்பல்களை அனுப்பிய இந்தியா.. தீவிர போர் பயிற்சி.. சீனா ஷாக்!

சீனா எதிர்பார்க்காத வகையில் தற்போது இந்தியா தனது போர் கப்பல்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பி அங்கு போர் பயிற்சிகளை செய்து வருகிறது.

இந்தியா சீனா இடையே லடாக் மோதலில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் லடாக் எல்லையில் பெரும்பான்மையான இடங்களில் இருந்து சீனா படைகளை 2 கிமீ தூரத்திற்கு வாபஸ் வாங்கியுள்ளது. முக்கியமாக கல்வான், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கியுள்ளது.

ஆனால் இன்னும் சீனா பாங்காங் திசோவில் இருக்கும் பிங்கர் பகுதி 4ல் இருந்து படைகளை திரும்ப பெறவில்லை. அங்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்க மறுத்து தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் எல்லையில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாமென்பதால் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. அங்கு இந்தியா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சீனா எதிர்பார்க்காத வகையில் தற்போது இந்தியா தனது போர் கப்பல்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பி அங்கு போர் பயிற்சிகளை செய்து வருகிறது. இன்று காலையில் இருந்து இந்தியா அங்கே போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய கடற்படையின் போர் கப்பல்கள், அணு ஆயுத கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்களில் இருக்கும் விமானங்கள் எல்லாம் அங்கே போர் பயிற்சிகளை செய்து வருகிறது. தென் சீன கடல் எல்லை மோதல் மற்றும் லடாக் மோதல் இருக்கும் நிலையில் சீனா இப்படை செய்து வருகிறது. இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவு இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்திய கடற்படையின் எத்தனை கப்பல்கள் எல்லையில் இருக்கிறது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. இதற்கான உண்மையான பின்னணி காரணமும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்தியா இங்கு தனியாக போர் பயிற்சிகளை மேற்கொள்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் இந்தியா இப்படி செய்கிறது.

பொதுவாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா தனது போர் கப்பல்களை அனுப்புவது வழக்கம். இந்திய கடல் பகுதிக்குள் நுழையாமல் சீனா படைகளை அனுப்புவது வழக்கம். அணு ஆயுத கப்பல்களை கூட சீனா அனுப்பி உள்ளது. அங்கு சீனா எப்போது அத்துமீறலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா தற்போது அங்கு போர் பயிற்சிகளை மேற்கொண்டு இருப்பது சீனாவிற்கு பெரிய அதிர்ச்சியாக மாறி உள்ளது .

பல வருடமாக சீனா இந்திய கடல் பகுதியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது .எப்போது இந்திய பெருங்கடலில் அத்துமீறலாம் என்பதுதான் சீனாவின் நோக்கமாக உள்ளது. இலங்கை கடல் எல்லையில் புகுந்து அதன் மூலம் இந்தியாவில் அத்துமீறலாமா என்று சீனா திட்டமிட்டு வருகிறது. இதனால்தான் இந்தியா அங்கே போர் பயிற்சிகளை அனுப்பி வருகிறது.

இன்னொரு பக்கம் இந்திய கடல் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு அந்தமான் நிக்கோபரை திறந்து விட இந்தியா ஆலோசித்து வருகிறது. இதை ஆபரேஷன் அந்தமான் என்று அழைக்கிறார்கள். இந்தியாவிற்கு மிகப்பெரிய பலத்தை அளிக்க போகும் திட்டம் ஆகும் இது. அதன்படி அந்தமான் நிக்கோபர் கடல் பகுதியையும், அங்கு இருக்கும் நிலப்பகுதியையும் இந்தியா தனது நெருக்கமான நட்பு நாடுகளுக்கு அளிக்க உள்ளதாக கூறுகிறார்கள்.

 

கருத்து தெரிவிக்க