உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

இன்று கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டாம் கட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளில், அங்கு புனர்வாழ்வு பெறுபவர்களைப் பார்வையிட வந்த எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இக் காலப் பகுதியில் 116 பேர் இவ்வாறு பார்வையிட வந்ததாகவும் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லையெனவும் பரிசோதனைகளில் தெரிய வந்தள்ளதாக ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புபட்டதால் ஏற்பட்ட கொரோனா பரவலுக்கமைய அடையாளம் காணப்பட்ட சமூகப் பரவல் தொடர்பில், 5,000 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தற்போது போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள, அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட PCR பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க