உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச் சீட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜப்பான், சிங்கப்பூருக்கு அடுத்ததாக ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜேர்மன் கடவுச் சீட்டினை வைத்திருக்கும் ஒருவர், விசா இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 189 நாடுகளுக்கு பயணிக்கலாம். அல்லது ஒரு நாட்டுக்கு சென்று இறங்கிய பின்னர் விசாவினை பெற்றுக் கொள்ளலாம்.
2017 இல் பட்டியலில் முதல் இடத்தினை வகித்த ஜேர்மனியை , ஜப்பானும், சிங்கப்பூரும் பின்னுக்கு தள்ளி விட்டன.
தற்போது முதலிடம் பிடித்துள்ள நாடு ஜப்பான். அந்த நாட்டின் கடவுச் சீட்டினை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இரண்டாவது இடத்தினை சிங்கப்பூர் பிடித்துள்ளது. அந்த நாட்டின் கடவுச் சீட்டினை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
கருத்து தெரிவிக்க