இலங்கையில் தமிழ் மக்களுக்கான அனுதாபத்தையும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைவையும் எந்த ஒரு தரப்பும் பிழையான கருதுகோள் கொண்டு பார்க்கக்கூடாது மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு உதவித்தலைவர் டட்டுக் அயூப்கான் இன்று கோலாலம்பூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனைக் குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ளவர்கள் இலங்கையின் தமிழர்கள் மீது அனுதாபம் கொள்வது தவறு அல்ல.
எனினும் பயங்கரவாத குழுவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பது தவறு என்று டட்டுக் அயூப்கான் குறிப்பிட்டார்.
தாமும் இலங்கை தமிழர் மீது அனுதாபம் கொண்டிருக்கிறேன். எனினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கமாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் 52வயதான ஆசிரியர் ஒருவர், நிறைவேற்று அதிகாரி ஒருவர், நகரசபை ஒன்றின்; உறுப்பினர் ஒருவர், தொழிற்சாலை ஒன்றின் பணியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கியுள்ளதாக அவ் தெரிவித்தார்.
இதில் ஒருவர் கடந்த வருடம் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தவர் என்றும் டட்டுக் அயூப்கான் கூறினார்.
கருத்து தெரிவிக்க