விளையாட்டு செய்திகள்

2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ஓட்டங்கள்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சில் திணறியது. ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்தது.

இன்றைய 3வது நாள் ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் அந்த அணி 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

கருத்து தெரிவிக்க