தேர்தல் சட்டங்களை மீறிய நான்கு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தேர்தல்களை கண்காணிக்கும் பெபரல் அமைப்பு கோரவுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் எழுதவுள்ளதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் காணிகள் வழங்கியமை மற்றும் நியமனங்கள் வழங்கியமை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சமுர்தி, கிராம சேவையாளர், மஹாவலி மற்றும் மத்திய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தமக்கு 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க