உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கு 12000 காவல்துறையினர் பாதுகாப்பு

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அணி பங்கேற்கும் கிரிக்கட் போட்டிகளின்போது 12000 காவல்துறையினர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதில் மூன்று சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள், 13 காவல்துறை அத்தியட்சகர்கள், 42 உதவிக்காவல்துறை அத்தியட்சகர்கள்,131 காவல்துறை பரிசோதகர்கள் ஆகியோர் உள்ளடங்கவுள்ளனர்.

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் 20க்கு 20 கிரிக்கட் போட்டித்தொடர் ஒக்டோபர் 5ம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் 12000 காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக டொல்பின் படையணி மற்றும் காவல்துறை பொறுப்பு பிரிவு என்ற ரோந்துப்பணிகளிலும் ஈடுபடவுள்ளது.

லாகூர் கடாபி மைதானத்தின் அருகில் உள்ள கட்டிடங்களின் மீது ஸ்னைப்பர் படையினரும் நிறுத்தப்படவுள்ளனர்.
உலங்கு வானூர்தியின் மூலம் வானில் இருந்து கண்காணிப்புகளும் இடம்பெறவுள்ளன.

கருத்து தெரிவிக்க