உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நீராவியடி பிள்ளையார் விவகாரம் திருகோணமலையில் கண்டன போராட்டம்

நீராவியடி பிள்ளையார் விவகாரம் திருகோணமலையில் கண்டன போராட்டம்
திருகோணமலையில் இன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரின்
அலுவலகத்திற்கு முன் நீராவியடி பிள்ளையார் கோயிலுக்கு உரிமையுள்ள பிரதேசத்தில்
முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை புரக்கணித்து எரியூட்டப்பட்ட பெளத்த துறவி மற்றும்
அங்கு அடாவடியாக நடந்து கொண்ட துறவிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக
கண்டனப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நீதியானது பாரபட்சமாக நடைமுறையில் உள்ளதென்றும் இது ஜக்கிய
இலங்கையில் இன முரன்பாட்டை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக
கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நாட்டின் சட்டமொழுங்கு சிங்கள பௌத்த மதத்துக்கு ஆதரவாகவும்
ஏனையவர்களுக்கு எதிராகவும் உள்ளதாக எண்ணத்தோண்றுகிறது.

பௌத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பதும் அதற்கு ஆதரவாக போலீஸார் கடமையாற்றுவதும் கண்டிக்கத்தக்கது .

எனவே அன்று நீராவியடியில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி பௌத்த பிக்குகள் பிணத்தை எரித்ததற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அன்றைய நீதிமன்ற தடையுத்தரவை மதிக்காமலும் அதனை கவனத்தில் கொள்ளாமல்
ஏற்பாடுகளை செய்ய மறுத்த அல்லது செய்யத் தவறிய போலிஸாருக்கெதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அத்தோடு நாட்டின் சட்டவாட்சி அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சமூகம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முண்டு கொடுத்தவர்கள் ஏன் ஆயுதம் தாங்கிய போராட்டம் இங்கு நடைபெற்றது. என்பதை இப்போதாவது உணரவேண்டும்.

எனவே இந்த சட்டவாட்சி அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் மொழிகளுக்கும்
பொதுவானது என்பதை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை புரிந்து
அதனை உறுதிப்படுத்த முன்வரவேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து
தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க