உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைதீவில் கவனயீர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் உயிர் வாழ்வதற்கான உரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்க வேண்டும் என கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முல்லைதீவில் இன்று இடம்பெற்றது

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியோடு இணைந்து குறித்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உடைய பிரதிநிதிகளும் நாட்டினுடைய சட்டங்கள் நீதித்துறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதற்கு ஆதரவாக குறித்த போராட்டத்தில் இணைந்து இருந்ததோடு

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் 15 மாவட்டங்களின்  இளைஞரணி தலைவராக செயற்படுகின்ற எஸ் கோபிகா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இன்றைய தினம்  இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது போன்று இலங்கையிலும் உயிர் வாழ்வதற்கான உரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டம் ஆக்கப்பட வேண்டும் எனக்கோரி  20 மாவட்டங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையும் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும்  முன்னெடுப்பதாக  தெரிவித்திருந்தார்

கருத்து தெரிவிக்க