உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இறுதி முடிவுக்காக 30 இல் கூடுகிறது சு.க. மத்தியசெயற்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (30) இரவு கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.
 
ஜனாதிபதி தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடுமா அல்லது பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்குமா என்பது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கூட்டணி அமைப்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுடன் பேச்சுகளை முன்னெடுத்துவந்தாலும் சின்னத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக கலந்துரையாடல்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
 
‘மொட்டு’ சின்னத்தை கைவிடுமாறு சுதந்திரக்கட்சியால் விடுக்கப்படும் கோரிக்கையை ஏற்பதற்கு மஹிந்த தரப்பு மறுத்துவருகின்றது.
 
இரு தரப்புக்குமிடையிலான இறுதி சுற்றுப் பேச்சு 30 ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது. அதன்பின்னரே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக சு.கவின் மத்தியகுழு கூடவுள்ளது.
 
அதேவேளை, சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று 27 இரவு 8 மணிக்கு கூடவுள்ளது. 

கருத்து தெரிவிக்க