அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஈராக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஈரானுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியிலேயே இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.
பேர்லினுக்கு செல்லும் வழியில் அந்த பயணத்தை ரத்துசெய்த பெம்பியோ, ஈராக்கில் சுமார் 4 மணித்தியாலமாக சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அமரிக்கா, ஏபிரஹாம் லிங்கோன் வானூர்தி கப்பலை அனுப்பிவைத்துள்ளநிலையில் ராஜாங்க செயலரின் பயணமும் முக்கியத்துவம் பெறுகிறது.
கருத்து தெரிவிக்க