கோட்டாபய ராஜபக்ச. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது உருவாக்கியிருந்த உயர் தொழில்நுட்ப குழுவை, அரசாங்கம் மீண்டும் உருவாக்கவேண்டும்.
இந்த பரிந்துரையை அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஒ பிளக் செய்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் இடம்பெறும் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதில் இந்தக்குழு சிறப்பாக செயற்படமுடியும் என்று குறிப்பிட்டார்.
இந்தக்குழுவை அமைப்பதனால் அரசாங்கத்துக்கு பாரிய நன்மைகள் ஏற்படும்.
இதன்மூலம் அமரிக்கா இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு முன்னர் செய்த தவறை, இலங்கை நிவர்த்தி செய்துக்கொள்ளமுடியும்
இந்தக்குழு கிடைக்கும் தகவல்களை உயர்மட்டத்தில் இருந்து அனைத்து பாதுகாப்பு தரப்புக்கு இடையிலும் பகிர்ந்துக்கொள்ளும்.
இதன் மூலம் எந்தவொரு தாக்குதல்களையும் தடுக்கமுடியும்.
எனவே இலங்கை அரசாங்கம் இது பற்றி சிந்திக்கவேண்டும் என்று ரொபட் ஓ பிளக் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க