உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மன்னாரில் நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து போராட்டம்

கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனமானது தற்காலிகமாக நேற்று புதன் கிழமை (26) நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மதியம் (26) அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த 16 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் கருத்திட்ட உத்தியோகஸ்தர்களுக்கு என நியமிக்கப்பட்டு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட நியமங்களை கடந்த 25 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரினால் தற்காலிகாமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்   பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னேடுத்திருந்தனர்
தேர்தலுக்காக குறித்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் குறித்த நியமனம் தேர்தல் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கோ அல்லது மாவட்ட செயலகத்துக்கோ எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நியமனத்திற்காக தாங்கள் இரண்டு முறை நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பின்னரே தங்களுக்கு இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான நியமனம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்படவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசியல் காரணமோ தேர்தல் காரணமாகவோ குறித்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தால் தேர்தல் முடிந்த பின்னர் மீள குறித்த நியமனம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நாங்கள் எமது கோரிக்கையை நிறைவு செய்வோம் என பாதிகப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 92 பேரின் நியமனமானது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க