உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இரண்டாக உடையுமா ஐ.தே.க.? 24 இல் முக்கிய கூட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அல்லது சபாநாயகர் கருஜயசூரிவின் பெயரை முன்மொழிவதற்கு ரணில் ஆதரவு அணி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் சஜித்தை பிரேரிப்பதற்கு அவருக்கு சார்பான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கடும் அமளி துமளி ஏற்படும் என்றும், இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் 91 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களை கட்சி தலைவர் நியமித்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜித, அர்ஜுண ரதுங்க ஆகியோர் இரட்டை நிலைப்பாட்டையே கடைப்பிடித்துவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க