உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய குழுவினருக்கு அனுமதி?

இலங்கையின் தலைவிதி நவம்பர் 16 இல் நிர்ணயம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி  நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இதன்படி ஒக்ரோபர் 7ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம், 10 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் ஒக்ரோபர் 6ஆம் திகதி மதியம் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் பிரசாரம் ஆரம்பமாகும். அதற்காக ஐந்து வாரங்கள் ஒதுக்கப்படும்.

இலங்கையில் நடைபெறும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் இலங்கை வருவார்கள்.
பொதுநலவாய கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஐரோப்பிய குழுவினருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அறியமுடிகின்றது. ஐரோப்பிய குழுவும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்பதே சிவில் அமைப்புகளின் கோரிக்கையாக இருந்துவருகின்றது.

அதேவேளை, உள்ளூர் கண்காணிப்பு அமைப்புகளான, பவ்ரல், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம், ஆகியவற்றுக்கும் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கமும், தமது கண்காணிப்பாளர்களை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க