முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று காலை முதல் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்
பட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை வாய்ப்புகள் கிடைக்காதவர்களும் வெளிவாரி பட்டங்களை பெற்ற சிலரும் இந்த போராட்டத்தில் இணைந்து இருந்தனர்
தமது போராட்டத்திற்கான நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் 48 மணித்தியாலத்திற்குள் நிரந்தர தீர்மானம் இல்லையெனில் தீக்குளிப்போம் என்று பதாகைகளை தாங்கியவாறு குறித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இவர்கள் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமது நிலைப்பாட்டினை எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தப்பட்ட நிலையில் அதற்கு பதில் கடிதம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டது.
குறித்த கடிதத்தினை மேலதிக மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவருடம் கையளித்தார்
குறித்த கடிதத்தினை பெற்றுக்கொண்ட பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரி இளைஞன் இன்றைய தினம் குறித்த போராட்டத்தை நிறுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் உரிய கால எல்லைகள் குறிப்பிடப்படாத நிலையில் 10 வேலை நாட்களில் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கிடைக்கப்பெறாது விட்டால் தான் இந்த போராட்டத்தை தொடருவேன் எனவும் தெரிவித்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.
கருத்து தெரிவிக்க