சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும், சஜித் ஆதரவு அணி உறுப்பினர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று மாலை அல்லது நாளை நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்கும் இலக்குடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஆசிர்வாதமும் தனக்கு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சபாநாயகரை நேரில் சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரவுள்ளனர்.
அத்துடன், சஜித்துக்கு ஆதரவான அறிவிப்பை சபாநாயகர் விடுக்கும்பட்சத்தில் கட்சி பிளவுபடுவதையும் தடுக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க