ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் (25.09.2019) ஆம் திகதி பெயரிடப்படுவார் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரியவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எழுத்துமூலம் அறிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழுவின் அனுமதியுடனேயே இறுதி முடிவு எடுக்கப்படும். சிலவேளை இரகசிய வாக்கெடுப்புகூட நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி 25 ஆம் திகதி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தொடர் சந்திப்புகளை நடத்திவருவதால் வெளிநாடு சென்றுள்ள கட்சி உறுப்பினர்களை நாடு திரும்புமாறும், ஏனைய உறுப்பினர்களை கொழும்பில் முகாமிட்டு இருக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்
கருத்து தெரிவிக்க