சினிமா

அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் “மாஃபியா”

2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்திருந்தது.இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கின்றார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.

“சிங்கமா? நரியா? யுத்தத்தில் ஜெயிக்கப்போவது யார்?” – ‘மாஃபியா’ டீசர் வீடியோ!

 

 

கருத்து தெரிவிக்க