தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்த வாரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.
நேற்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டால் அவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வுகளை முன்வைப்பார் என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்தநிலையிலேயே கூட்டமைப்பு நாளை ரணிலை சந்திக்கவுள்ளது.
தம்மை சந்திக்குமாறு ரணில் ஏற்கனவே தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க