உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போக்குவரத்து சபை பணி புறகணிப்பு- வெளிமாகாண பேருந்துகள் திருப்பி அனுப்பபட்டது!!

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2006/30 , 2016/02 இலக்க சுற்றுநிருபத்தின் படி 2018.10.01 ஆம் திகிதியிலுருந்து தொடர்ந்து அமுல்படுத்தபடும் சம்பளம், இ.போ.ச ஊழியர்களின் அலுவலகசபையின் ஊழியர்களிற்கு செப்டெம்பர் மாதத்தில் இருந்து அடிப்படை சம்பளத்தில் உடனடியாக சேர்கபடவேண்டும்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிற்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவுதிட்டத்தின் மூலம் சம்பள அதிகரிப்பு இடம்பெற்று ஒராண்டு நிறைவுபெற்றுள்ளநிலையில் புதிய சம்பளமான.2500 ரூபாய் இந்த ஆண்டின் யூலை மாதத்தில் இருந்து வழங்கப்படவேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கபடல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்களினால் நாடாளாவிய ரீதியில் குறித்த பணிபுறகணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா சாலை ஊழியர்களும் நேற்றயதினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிபுறகணிப்பு காரணமாக கொழும்பு, குருநாகல் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து நேற்றயதினம் வவுனியாவிற்கு வருகை தந்த பேருந்துகளும் பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதிக்கபடாமல் சாலையிலிருந்து மீண்டும் திருப்பி அனுப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பணிபுறகணிப்பு காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க