சமுர்த்தி அதிகாரிகள் 5 ஆயிரம் பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நாளையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
முற்பகல் 11 மணிக்கு அலரி மாளிகையில் நிகழ்வு ஆரம்பமாகுமென சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான அங்கமான சமுர்த்தி வங்கிகளை மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென நலன்புரி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ம் ஆண்டளவில் 50 ஆயிரம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏற்றுமதி வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க முடியுமென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க