வெல்லம்பிட்டி பகுதியில் 30 கிலோ 480 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க