நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மரக்கறி வகைகளில் அவரைக்காயும் ஒன்று. இது மிகவும் சுவையானது மட்டும் அல்ல. ஏராளமான நன்மைகளையும் உள்ளடக்கி உள்ளது. அவரைக்காயை பலமுறைகளில் சமைத்து சாப்பிடலாம். இதில் அடங்கி உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
அவரைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும்.
இரத்த ஓட்டம் சீராவதுடன் எலும்புகளும் பலமடையும்.
அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. இதில் புரதம் நிறைந்தள்ளதால் இது ஒரு நிறை உணவாகும்.
அவரைக்காய் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும்.
அவரைக்காயில் விற்றமின் சி நிறைந்துள்ளதால் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
உணவுச் சமிபாடு, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு உகந்தது.
கருத்து தெரிவிக்க